நோயின்றி வாழ சித்தர்கள் கூறிய அற்புத வழிகள்

 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, ஆனால் இன்றைய காலத்திலோ நோயில்லாத மனிதர்களை பார்க்க முடியாது.

சிறு குழந்தைகள் கூட ஏதாவதொரு நோயின் தாக்கத்திற்கு ஆளாகியவர்களாகவே காணப்படுகின்றனர்.

முற்காலத்திலே சித்தர்கள் நோயின்றி வாழ்வதற்கு பல வழிமுறைகளை கையாண்டுள்ளனார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

கடுக்காயிலிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

  • நாளொன்றுக்கு 2 முறை உணவு கொள்ள வேண்டும், பசித்தப்பின் உணவருந்த வேண்டும்.
  • இரவில் மட்டும் உறக்கம் கொள்ள வேண்டும், பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • புளித்த தயிரையே உண்ண வேண்டும்.
  • பசும் பாலையே உண்ண வேண்டும்.
  • எண்ணெயிட்டு தலை முழுகும்போது வெந்நீரில் குளிக்கவேண்டும்.
  • வாசனைப் பொருட்களையும் பூக்களையும் இரவில் முகருதல் கூடாது.
  • இரவில் விளக்கு, மரம், மனிதர் இவைகளின் நிழல்களில் தங்கக் கூடாது.

12,922 total views, 11 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *