கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த சிவராத்திரி விரதம்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நம்பிக்கையுடன் சிவராத்திரி விரதமிருந்து மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நலங்களும் பெறலாம்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த சிவராத்திரி விரதம்
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.

‘ஓம் நவசிவாய’ என்ற மந்திரம் உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்றுகூடி ‘சிவாய நம’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

இரவின் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி. இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை.

நான்காம் ஜாமத்தில் அரிசி உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத்தாலும் மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பு, செண்பகம் நீங்கலான மற்ற மணம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆடிக்கிருத்திகை கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம்.

மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள், சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறுமுகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.

காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.

கோவில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்தபுராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். பழனி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் பழனி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. முருகப் பெருமான் இத்தலத்தில் பல்வேறு அற்புதங்களை செய்கிறார்.

சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம். வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கடன் தொல்லை அடியோடு நீங்கும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நலங்களும் பெறலாம்.

12,877 total views, 26 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *