நாகதோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி?

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. நாக தோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளவர்கள் இந்த ஸ்ரீநாகராஜ பூஜையை செய்வது நல்லது. சுவற்றிலோ அட்டையிலோ வேறு பொருளின் மீதோ நாகத்தை வரையலாம்.

அரிசி மாவில் ஜலத்தை விட்டுக்கரைத்து, ஏழு பாம்புகள் வரைய வேண்டும். மேலே தலை கீழே வால் இருக்க வேண்டும். பூஜை செய்பவர்களின் கைக்கு ஒரு முழு அளவில் கிழக்கு முகமாக வரைய வேண்டும்.

வடக்கு முகமாக அமர்ந்து, பூஜையை பெண்களோ அல்லது ஆண்களோ அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டி அன்று செய்ய வேண்டும். நிவேதன பொருளாக தேங்காய் பழம் இருக்கலாம். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கஞ்சிவடிக்காத சாதத்தை நிவேதனம் செய்து உப்பில்லாமல் சாப்பிடலாம். இரவில் பால் பழம் சாப்பிடுவது நல்லது.

மகளிர் ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டியன்று பாம்பையும், அது குடியிருக்கும் புற்றை யும் வழிபட வேண்டும். தங்கம், வெள்ளி, செம்பு முதலியவற்றில் ஏதாவது ஒரு உலோகத்தில் நாக உருவத்தை செய்து அவ்வடிவத்தை பூஜை அறை யில் வைக்க வேண்டும். சஷ்டி தினத்தன்று பூஜை அறையில் கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அன்று உபவாசம் இருப்பது நல்லது. மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி அதன் பின்னர் உணவருந்தி உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் உடல் நலம், மனநலம், குடும்ப நலம், மகப்பேறு ஆகியவை உண்டாகும். நாகதோஷம் நீங்கும்.

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது.

குழந்தை இல்லாதவர்கள் நாகத்தை சிலை வடிவில் அமைத்து ஆறுமாதம் தண்ணீரிலும் ஆறுமாதம் நெய்யிலும் வைத்து பூஜை செய்து அரச மரத்தில் வைத்து வழிபடுவார்கள்.

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் வேள்வி செய்யும் பொழுது நாக சக்கரம் வரையப்படுகிறது. மேல்மருவத்தூர் கோவில் கருவறையில் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க ஆதிபராசக்தி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

12,976 total views, 8 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *