வீட்டில் சனீஸ்வரரை வைத்து வணங்காதீர்கள் ஏன் தெரியுமா?

 

 

 

 

 

 

 

சனீஸ்வரன் என்றாலே மக்கள் அனைவருக்கும் அச்சம் தான். அதற்கு அவரது பார்வை தான் காரணம்.

அதனால் சனீஸ்வரர் எப்பொழுதும் தனது கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார்.

ஏனெனில் அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் கருப்புத் துணியால் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டுள்ளார்.

சனி பகவான் நீதிமான். இவர் எப்போதும் தேவர், மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் எப்போதும் கவனித்தவாறு நன்கு பார்த்துக்கொண்டே இருப்பார் என்பது சாஸ்திர உண்மையாகும்.

இவர் குற்றங்கள் புரிபவர்களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும், அகந்தை மற்றும் அகங்காரத்துடன் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டார்.

அத்தகைய சிறப்பு பெற்ற சனீஸ்வரனின் படம் மற்றும் சிலையை வீட்டில் வைத்து வணங்கலாமா?

வீட்டில் சனீஸ்வரனை வைத்து வழிபடக் கூடாது ஏன்?

வீட்டில் சனீஸ்வரனின் படத்தை வைத்து வழிபாடு செய்யக் கூடாது. ஏனெனில் நவகிரகங்களில் ஒருவர் தான் சனைச்சரன் அதாவது சனீஸ்வரர்.

சனைச்சரன் என்பது மருவி சனீஸ்வரன் என்றானது. சனைச்சரன் என்றால் மெதுவாக நகர்பவன் என்று அர்த்தம்.

நவகிரகங்கள் என்பவர்கள் கடவுள் கூறிய பணியை செய்யும் வேலையாட்கள். அதனால் ஆலயத்தில் கூட நவகிரகங்களை பரிவார தேவதைகளாகத் தான் பிரதிஷ்டை செய்கிறார்கள்.

எனவே சனீஸ்வரர், ராகு, கேது, குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து வணங்கக் கூடாது.

நவகிரகங்களின் ஒன்றான சனீஸ்வரனின் படம் மற்றும் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால், அது நமக்கு நற்பலன்களைக் கொடுக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது.

143 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *