ஆலய வரலாறு

“வன்னி மாநகரில் சரித்திரம் படைக்கும் திருக்கோயில் எனத் திகழ்வது ஸ்ரீ அகிலாண்டேசுவரர் சிவன் கோயில். இத் திருக்கோயில் வன்னி மாநகரில் உள்ள சிறந்த தேவஸ்தான வரிசையில் இடம்பெறுகிறது. இத்திருக்கோயில் வன்னிமாநகரில் தனக்கென ஒரு சரித்திரம் படைக்கும் கோயிலாக மிளிரும். வன்னிமாநகருக்கு அருளும், அழகும், புகழும் கொடுக்கும் புனித ஸ்தலமாக சிறப்பெய்தும். அகிலாண்டேஸ்வரி சமேதராகக் காட்சி கொடுக்கும் இவ்வாலயம் ஈழத்துத் திருவானைக்காவாகச் சிறப்படையப் போகிறதென்பது ஆண்டவனின் அருள் போலும் என்று விபரிக்கின்றார் வவுனியா சைவ அடியார் சன்மார்க்க சங்கச் செயலாளர் கா. மகேஸ்வரலிங்கம். (1996:33)

இளஞ்சைவப் புலவர் ஞானவேல், வவுனைக் கோவில்குளச் சிவாலயம் குறித்து மேல்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “சிவாலயம் ஒன்றை அமைப்பது இலகுவானதும் எளிதானதுமான காரியமல்ல. அத்தோடு ஒரு சிவாலயம் ஒரே வேளையிலே அதன் முழு அமைப்பைப் பெற்று இருக்க வேண்டும் என்பதும் கடினமான காரியம். ஆனால் வவுனியா நகரின் கண்ணாக விளங்கும் கோவில்குளம் சிவாலயம் ஒரு வேளையிலேயே சிவாலயத்திற்குரிய எல்லா அம்சங்களும் வாய்க்கப்பெற்றுக் கட்டப்பட்ட சிவத்தலமாகக் காணப்படுகிறது. வவுனியா கோவிற்குளச் சைவப்பொது மக்களின் அயரா முயற்சியால் இவ்வாலயம் புதிதாகக் கட்டப்பட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களைக் கொண்டு 01.05.1996 இல் திருக்குடமுழுக்குப் பெற்றது.

 

திருக்கேதீஸ்வரத்துக்கு அடுத்தபடியாக வன்னியில் சிறந்து விளங்கும் வன்னியில் சிறந்து விளங்கும் பெரிய சிவாலயமாகவும், விசாலமான கர்ப்பக்கிருகத்துடன் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயமாக இது விளங்குகிறது. யானையும் சிலந்தியும் சிவனை வழிபட்டு ஈடேற்றம் பெற்ற திருவானைக்காவைப் பின்பற்றி “ஈழத்துத் திருவானைக்கா” என்று சிறப்பித்துக் கூறுமளவிற்கு கோவில்குளம் சிவாலயம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரரின் அருளாட்சி நிலவுகிறது.

ஸ்ரீ அகிலாண்டேசுவரர் திருக்கோயிலின் முதலாவது மகாகும்பாபிஷேகம் 01.05.1996 அன்று இடம் பெற்றது. இவ்வாலய திருப்பணிச் செலவு 15மில்லியன் ரூபா

    திருக்கோயில் அமைவிடம் :-

வவுனியா மத்திய பஸ் நிலையம், புகையிரத நிலையம் இரண்டு பாதை வழியும் வந்திறங்கியவர்கள் அதிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் வீதியில் முதலாம் கட்டையை அடைந்தால் (இத் தூரம் நடந்து செல்ல முடியும்) தென்படுவது மூன்று பாதைகள் கொண்ட முச்சந்தி. இதிலிருந்து பிரிந்து செல்வதுதான் அந்தத் தவப்பேறு பெற்ற கோவில்குளம் கிராமம். இக்கிராமத்தின் முகப்பிலே தென்படுவதுவே அண்டசராசரங்களைத் தன்வசப்படுத்தும் அகிலாண்டேஸ்வரர் திருக்கோயில்.


ஆலய முகப்பில் வழிப்பிள்ளையாராகக் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பவர் சித்திவிநாயகர். இவ்வாலயமே அங்கு வாழ்ந்த – வாழுகின்ற மக்களின் மனதைக் குடிகொண்டு பார்ப்போர் பரவசநிலையடையும் வண்ணம் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸவரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோயிலாக விளங்குகிறது.

தலவரலாறு பற்றி விளக்குபவர் அருள்மிகு மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் பூசகர் பரம்பரையில் அநாதியாக விளங்கிய பட்டர் மரபில் வந்துதித்தவரும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் பரம்பரைத் தர்மகர்த்தாவும் ஆதிப் பூசகராகவும் விளங்கிய நயினாப்பட்டரின் வழிவந்த ஸ்ரீமான் முத்துக்குமாரரின் மகனான காசிப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் ஜந்தாவது தவப்புதல்வராக உதித்தவரும், வவுனியா கோயில்குளம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் பரம்பரை – ஆதீன – ஆதித் தர்மகர்த்தாவாகவும் கௌரவ செயளாளராகவும் விளங்கும் ‘சிவமணி’ ஆறுமுகம் நவரெத்தினராசா அவர்கள் ஆவார்.

முடிக்குரியவர்களினால் அன்றைய காலகட்டத்தில் சைவ ஆலயத்திற்காக வழங்கப்பட்டது இக்காணி. காணியின் விஸ்தீரணம் 3ஏக்கர் 6 பேர்ச்சாக இருந்தது. தற்போது 2 ஏக்கர் 6 பேர்ச்சாக உள்ளது. இக் காணியில் 1956 ஆம் ஆண்டு அளவில் தற்போது வழிபட்டு வரும்  விநாயகரை ஸ்தாபித்து ஆராதித்து வந்துள்ளனர்.

இவர்களில் திரு. சின்னத்தம்பி ஐயா அவர்களே ஆலயத்தைப் பராமரித்தும் பூசை செய்தும் வந்துள்ளார். (ஆலய குடமுழுக்கு வரை). இக் காணியில் சிவாலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்திருக்கலாம். அவை பற்றிய சான்றுகள் ஒன்றும் கிடைத்திலது. அத்துடன் முயற்சி செய்தவர்களில் ஒருவர்தான்  திரு. சின்னத்தம்பி ஐயா அவர்கள். மற்றவர்கள் ஆலய அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு முன்பே மறைந்து விட்டார்கள்.

சித்திவிநாயகர் பரிபாலனத்தை 1987 ஆம் ஆண்டளவில் பொறுப்பேற்ற நாங்கள் இப் பணியைப் பரிசீலனை செய்து “சிவாலயத் திருப்பணி” என்ற போதே பின்னடைவு எய்திய உறுப்பினர்களை விடுத்து தனிமனித முயற்சியும் ஊக்கமும்தான் இதற்கு வேண்டும் என்ற பேராவலுடன் தற்போதைய செயலாளராகிய அடியேனும், மறைந்த திரு. நா. இராமநாதன், திரு. இரா. சண்முகம், திரு. ஆ. உமாதேவன் ஆகியோர் முன்நிற்க அடியார்கள் ஊக்கமும் ஒத்தாசையும் வழங்கிவர, காஞ்சிப் பெரியவரின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் 18.08.1989 அன்று அதிகாலை 4.00 மணிக்கு நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவரும், தீவுப்பகுதி உதவி அரசாங்க அதிபருமான திரு. ஆறுமுகம் தியாகராசா அவர்களால் அங்கு ஸ்தாபனம் செய்விக்கப்பட்டது.

இப்பணி சிறப்புற நடந்துவரும் நிலையில் 1993 ஆம் ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி வாரணாசியில் திரு. நா. இராமநாதன் அவர்களுக்குச் சிவப்பதப் பேறு வாய்க்கப்பெற்றது. அதைத் தொடர்ந்து திருப்பணி நாளுக்குநாள் சிறப்பாக புது மெருகுடன் நடைபெற்று வந்தது. ஆலயத்திற்கான ஏனைய மூல விக்கிரகங்களைத் தமிழ்நாடு ஸ்ரீரங்கம் திரு. பழனியப்பன் ஸ்தபதியாரும் உற்சவ விக்கிரக மூர்த்திகளைத் தமிழ்நாடு சுவாமி மலை திரு. தேவசேனாதிபதி ஸ்தாபதியாரும் தங்கள் கைவண்ணங்களாக உயிர்ச்சிலை வண்ணங்களாக வார்த்துத் தந்தார்கள். ஜீவகளை ததும்பும் இச் சிவ விக்கிரகங்கள் யாவும் மனதை ஈர்த்துக் கொள்ளை கொள்ளும் கலை சமயப் பொலிவு கொண்டவை. இவற்றையெல்லாம் எப்படிச் செய்கின்றோம் என்றுகூட நாங்கள் எல்லாம் சிவபெருமானே என்று சாந்தியடைவோம். இவ்விக்கிரகங்களைச் செயலாளராகிய யானும் இக் கோயிலின்   தர்மகர்த்தாவும் தலைவருமான உயர்திரு. இரா.சண்முகம்  அவர்களுமாக இந்தியாவுக்குச் சென்று எடுத்து வந்தோம். இக்கைங்கரியம் ஈடேறுவதற்கான பூரண ஒத்துழைப்பை வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபர்களாக இருந்த திருவாளர்கள் லங்காநேசன், தில்லைநடராசா கே. கணேஸ் ஆகியோரும், இந்து கலாச்சார அமைச்சராகவிருந்த  கௌரவ. பி.பி. தேவராஜ், அமைச்சு செயலாளராக இருந்த திரு.கா.தயாபரன், அப்போதைய கலாசார அமைச்சுச் செயலாளர் திரு.யோகநாதன், அப்போதைய இந்து சமயத் திணைக்களப் பணிப்பாளர் திரு.க.சண்முகலிங்கம் போன்றோர் பெருந்துணை புரிந்தார்கள்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கைச் செய்வதற்காக கும்பாபிஷேசக் குழுவொன்றை சிவனடியார்களையும், அனுபவம் மிக்க ஆலய பரிபாலன சபையினரையும், தத்துவங்களைக் கற்றுணர்ந்த கல்விமான்களையும் ஒருங்குகூட்டி அமைத்து அதன்படி மகாகும்பாபிஷேக பிரதம குருவாக நயினை சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்களைக் கொண்டு 01.05.1996 இல் ஆவர்த்தனப் பிரதிஷ்டை மகாகும்பாபிஷேகத்தையும் இனிதே நிறைவேற்றினோம்.

இக் கைங்கரியங்கள் யாவும் “முன்னவன் முன்னின்றல் முடியாதது ஒன்றுமில்லை” என்பது போல் கருணைக் கடலாம் சித்திவிநாயகர் பேரருளோடும் அம்மையப்பரின் கருணைக் கடாட்சத்தாலும் இனிது நிறைவெய்தின என்பதில் எமக்கு எள்ளளவேனும் சந்தேகமில்லை.

வவுனியா கோவிற்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சிவன் ஆலயம், காஞ்சிமடம் (கல்யாண மண்டபம்), அருளகம் சிறுவர் இல்லம், சிவன் முதியோர் இல்லம் என்னும் நிறுவனங்களைத் தன்னுடையதாக்கியுள்ளமையைச் சைவத்தமிழ் உலகம் நன்கறியும். கல்வி நோக்கிலும், சைவ சமய அறிவு வளர்ச்சி அபிவிருத்திப் பணியிலும், கல்விப் பணிகளிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டு வளர்ந்து வருகிறது. அவ்வகையில் மூன்று சிறப்பு மலர்கள் குறிப்பிடற்பாலன.

 

 1.  சிவ தத்துவ மலர் – 1996
 2.  சிவ தத்துவ மலர் – 2008
 3.  அகவை பத்தில் அருளகம் – 2011

சைவ சமய வளர்ச்சி வரலாற்றிலே சிவதத்துவ மலர் 1996 என்னும் கருத்துக் கருவூலப் பொக்கிஷம் பிரதான இடம் பெறுகிறது. அம்மலரிலே இடம்பெற்றுள்ள விடயங்களும் எழுத்தாளர்களும் மிகவும் தரத் தன்மையுடன் இயங்குபவை. இம்மலரிலே அடங்கும் விடயங்களால்தான் உலக சைவப்பெரு மக்களும் அறிய வேண்டியவையாக உள்ளன.

             கோவில்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.

             கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருத்தல வரலாறு.

             வன்னிமாநகரில் சரித்திரம் படைக்கும் திருக்கோவில்.

             கோயில்குளத்தீஸ்வரன் திருப்பள்ளியெழுச்சி.

             அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்.

             திருப்பொன்னூஞ்சல்.

             ஆதிசங்கரரும் இந்துமதமும்

             சிவபரத்துவம்.

             பாணலிங்கம்.

             அருள்புரக்கும் அகிலாண்டேஸ்வரி.

             சிவத்தமிழ் பாமாலை.

             கீர்த்தனைகள்.

             சிவநெறி.

             சிவ வழிபாடு.

             வன்னிச் சிவாலயங்கள்.

             கோயில்கள்.

             கோயில் வழிபாடு.

             தெய்வீகத் திருத்தலங்கள்.

             திருமூலர் கண்ட சிவம்.

             கைலைமலையானே போற்றி போற்றி

             கண்ணப்பரும் காளாத்தியப்பரும்.

             சிவலிங்க தத்துவம்.

             சிவமூர்த்தி – சிவதத்துவ விளக்கம்

             சைவத்தின் ஊற்றுக் கண்.

             திருமுறைகள் தொடரட்டும்.

             தேவாரங்களும் பண்களும்.

             ஓசையும் ஒலியும்.

             பொன் மழலைப் பாடல்கள்.

             அநாதி மதம்.

             இந்து சமயமே மெய்ச்சமயம்.

             சைவமும் தழிழும்.

             சைவ நீதி.

             இன்றைய சைவச்சமூகமும் சமய உணர்வு நலனும்.

             சைவ சமய அறிவு.

             நிரந்தர சஞ்சீவி.

             மெய்ஞான போதம்.

             திருமந்திரத்தில் சமய ஒழுக்கம்.

             பெரியபுராணமும் சைவசித்தாந்தமும்.

             வேண்டத்தக்கது.

             யாதும் உனையன்றி உண்டோ?

             ஆத்மீக வள்ளல் ஆத்ம ஜோதி.

             அழிக்கமுடியாத கோயில்குளம் சிவத்திருத்தலத்தின் மறைக்கமுடியாத தலவரலாறு.

என்னும் எழுத்துக்கள் அற்புதமானவை. அனைவரும் படித்தறிந்து தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.

 • காஞ்சிகாமகோடி பீடாதிபதி சிவஸ்ரீ ஸ்ரீநிவாஸநாகேந்திரக் குருக்கள்
 • அரச அதிபர் கே. கணேஷ்
 • உதவி அரச அதிபர் ஆ. தியாகராசா
 • வை. பாலச்சந்திரன் MP
 • இரா. சண்முகம் JP,
 • நகரசபைத் தலைவர் ஜி. ரி. லிங்கநாதன்
 • இந்துமாமன்றத்தின் கவிஞர் சி. எ. இராமஸ்வாமி
 • மக்கள் சேவைமாமணி நா. சேனாதிராசா JP
 • சட்டத்தரணி மு.கோ.செல்வராசா JP
 • தஞ்சாவூர் தேவசேனாதிபதி ஸ்தபதி
 •  திருவாசகச் செல்வர் வை.செ.தேவராசா
 • ஸ்ரீரங்கம் ஆர். பழனியப்பன்
 • ஆதிப் பூசகர் கந்தையா சின்னத்தம்பி
 • சிவமணி ஆ. நவரெத்தினராசா
 • திரு.கா. மகேஸ்வரலிங்கம்
 • ஆழ்கடலான் மகாவித்துவான் மீனாட்ஷிசுந்தரம்பிள்ளை
 • கவிஞர் வ.சிவராசசிங்கம்
 • கலாநிதி அ.மகேஸ்வரி
 • வித்துவான் சைவப்புலவர் வ.செல்லையா
 • சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
 • வித்துவான் வசந்தா வைத்தியநாதன்JP
 •  சங்கீதபூசணம் இசைப்பேராசான் நா.வி.மு.நவரத்தினம்
 • திரு.ஆ.குணநாயகம்
 • நயினை சுப்பிரமணியம்,
 •  நயினை கனகரெத்தினம்இ
 • இளஞ்சைவப்புலவர் ந.ஞானவேல்
 • இரா.நாகமணி, திருமதி. மா.கனகலட்சுமி
 • வாகீசகலாநிதி. கனக. நாகேஸ்வரன்  
 • கலைகீர்த்தி பேராசிரியர் சி. தில்லைநாதன்
 • திருமதி தமிழின்பம் மாணிக்கராசா
 • கவிஞர் , பணடிதர் சைவப்புலவர் சி. வடிவேல்
 • சிவத்தமிழ்த் தொண்டன் திரு. குமாரசாமி சோமசுந்தரம்
 •  கம்பவாரிதி இ.ஜெயராஜ்,
 • சி.குமாரசாமி 
 • கவிஞர் கண்ணதாஸன்
 • செ. தமிழ்ச்செல்வன்
 • வேலணை வேணியன்
 • நயினை கே.எஸ்.அரவிந்தன்
 •  திருமதி பூமணி குலசிங்கம்,
 • தமிழ்மணி நா. பரமேஸ்வரி
 • அருள்மொழிச் செல்வர் தமிழ்மணி தி. சிவாஜகேதீஸ்வரன்
 • பண்டிதர் வித்துவான் இ.திருநாவுக்கரசு
 • பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி JP
 •  திரு.வை.க. சிவப்பிரகாசம்
 • இ யோகேந்திரா துரைசாமி
 • கே.பொன்னுத்துரை JP
 •  திருச்சி எம்.ஹரிலிங்கம்
 • திரு.ஆ. உமாதேவன்

ஆகியோரது ஆக்கங்களை சிவதத்துவம் 1996 மலரிலே இடம்பெற்றுள்ளன. இம் மலரை வெளியிடும் பதிப்பாசிரியர் எனக் கடமை புரிந்தவர் இலங்கை சப்பிரமுவா பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர் (பணிநிறைவு) டாக்டர் கனகசபாபதி நாகேஸ்வரன், உலகில் வாழும் தமிழ், சைவப்பெரு மக்கள் இம்மலரை இன்றும் வவுனியா கோயில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சிவன் திருத்தலம், அருளகம் சிறுவர் இல்லத்திலும் பெற்றுக் கொள்ளலாம். நமது சைவசமயத்தின் கடவுட் கோட்பாடுகள், சைவ விழுமியங்கள், திருமுறைச் சிறப்புக்கள் இன்னும் அறிய வேண்டிய அரிய விடயங்கள் இச்சிறப்பு மலரிலே உள்ளடங்கியுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

திரு.ஆ. நவரெத்தினராசா அவர்கள்,

               கௌரவ செயலாளர்,

               ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லம்,

               உமாமகேஸ்வரன் வீதி,

               கோயில்குளம்,

               வவுனியா.

               தொலைபேசி இல – 02422212685

255 total views, 1 views today